முகப்பு

ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் குடிமை பணி தேர்வில் தமிழகத்தில் இருந்து இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி மற்றும் பிற பதவிகளுக்கு தேர்வு பெறுவோரின் விகிதம் உயர்ந்து கொண்டே இருந்தாலும் அவர்களுள் தமிழ் மொழியில் தேர்வு எழுதி வெற்றி பெறுவோரின் விகிதம் மிகக் குறைவாகும். இக்குறைபாட்டிற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் அவைகளுல் மிக முக்கியாமானது தமிழில் தேர்வு எழுதுபவர்களுக்கு தமிழில் பல்வேறு பாடங்களுக்கு போதுமான புத்தகங்கள் இல்லாதாதும் ஒரு சில பாடங்களுக்கு குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் போன்றவைகளுகளை முற்றிலும் ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க கூடிய நிலை உள்ளதும் ஆகும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஏராளமான புத்தகங்கள் உள்ளபோது தமிழில் இல்லாத குறையை இவ்வலைத் தளத்தின் மூலம் ஓரளவேனும் களைய முயன்றுள்ளேன். தமிழில் தேர்வு எழுதுதல் எனும் வினாவே முதன்மை தேர்வு எழுதும் பொழுதுதான் எழுகிறது, ஏனெனில் முதல்நிலைத்தேர்வில் அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் எனவே இத்தளம் முதன்மை தேர்வு எழுதுவோர்க்கு அதிக பயன் உள்ளதாக இருக்கும் என்றாலும் முதல்நிலைத் தேர்விற்கு தயாராகும் முறையும் இங்கே விவாதிக்கப் படும். "ENGLISH IS A LANGUAGE NOT A KNOWLEDGE" என்பதை மெய்பிக்கும் வகையில் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெற விரும்பும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.